இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் கருவேப்பங்கேணி வட்டரக்கிளையின் தலைவர் தனுச பிரதீப் என்பவர் மீது நேற்றிரவு சுமார் 9.20 மணியளவில் கொலைவெறி தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
தனது வீட்டிலிருந்து உணவுப்பொருட்கள் வேண்டுவதற்கு கடைக்குச் சென்று கொண்டிருந்த வேளை கூழாவடி சந்தியில் உள்ள டிஸ்கோ விளையாட்டு மைதானம் அருகே இனம் தெரியாத நபர்களால் தலையில் பலமாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவருக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இன்று காலை சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்பட்டு அறுவைச்சிகிச் சைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் நடைபெற இருந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக கருவேப்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட இருந்த தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் வைத்தியசாலையில் உள்ள பொலிசாரினால் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்
படம் - P. சசி
0 Comments
tamil makal kural