கல்லடி பகுதியில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் பணி !


மட்டக்களப்பு - கல்லடி உதயம் விழிப்புலனற்றோர் நிலையம், தரிசனம் விழிப்புலனற்றோர் நிலையம் மற்றும்  சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம் போன்றவற்றிலுள்ள மாணவர்களின் 
வேண்டுகோளுக்கிணங்கவும் குறித்த பகுதியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடனும் குறித்த மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கல்லடி பகுதியில் மின் சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் பணி ஞாயிற்றுக் கிழமை 06.08.2023 அன்று ஆரம்பமானது.

பிரதேச மக்கள், விழிப்புலனற்றோர் மாணவர்கள் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமாணவர்கள்  போன்றவற்றிலுள்ள மாணவர்களின்
இராஜாங்க அமைச்சர் 
 சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இப்பணி இடம் பெற்று வருவதாக 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments