பல குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அதிக அடிமையான சந்தேக நபர், அதற்கான பணத்தை தேடும் நோக்கில் பொலிஸ் அதிகாரி போல் நடித்து நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி அதில் பயணிக்கும் நபர்களின் உடைமைகளை கொள்ளையடித்ததுடன் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
tamil makal kural