ஹஜ் பெருநாள் தினத்தில் கடன் தரவேண்டிய அனைவரையும் மன்னித்து ஆதாரங்களையும் தீயில் எரித்த செல்வந்தர்!



அனைத்து கடன்களும் மன்னிக்கப்பட்டதாக தொழிலதிபர் ஒருவர் தனது கடனாளிகளின் கணக்கு புத்தகங்களை தீயிலிட்டு எரித்த மனதைக் கவரும் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.


கடனாளிகளின் பெயர்கள் எழுதப்பட்ட புத்தகங்களை தொழிலதிபர் ஒருவர் எரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


புனித ஹஜ் பெருநாள் முடிவடையும் துல் ஹிஜ்ஜாவின் பத்தாவது நாள் அன்று  இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.


சவூதி அரேபிய தொழிலதிபர் சலீம் பின் ஃபத்கான் அல் ரஷிதி தனக்கு கடன்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் பிற தகவல்களை எழுதிய கணக்கு புத்தகங்களை எரித்து கொண்டிருந்தார். ஒவ்வொரு புத்தகத்தையும் திறந்த நெருப்பில் வைக்கும் போது அரபு மொழியில் இவை அனைத்தும் தனது கடன்கள் என்றும் இந்த மாதத்தின் நன்மைக்காக கடனாளிகளை மன்னித்துவிட்டதாகவும் கூறுகிறார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொழிலதிபரை வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.


இஸ்லாமியர்களின் புனித மாதமான துல்-ஹிஜ்ஜாவில் பல விதமான நல்ல காரியங்களையும் இஸ்லாமியர்கள் செய்ய வேண்டும் எனவும் அவை பல மடங்கு நன்மைகளை பெற்றுத் தரும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டுத் தான் முஸ்லிம்கள் குறித்த நாட்களில் புனித மக்கா நகர் சென்று ஹஜ் கடமையில் ஈடுபடுவார்கள். அதற்கு பொருளாதார வசதியற்றவர்கள் தம்மால் முடிந்த நல்ல பல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.


இந்நிலையிலேயே குறித்த தனவந்தர் தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்து கடன்களையும் விட்டுக் கொடுத்து விட்டதாகவும், இனிமேல் தனக்கு வர வேண்டிய கடன்களை கேட்க்க மாட்டேன் எனவும் கூறி கடன்களை எழுதி வைத்திருந்த ஆதாரங்களையெல்லாம் தீயிட்டு கொழுத்தியுள்ளார்

Post a Comment

0 Comments