புதிய முறைமை அமுலாக்கப்படும் வரையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுவோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காக தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை என டுவிட்டர் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பயனாளர்கள் எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறியப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
0 Comments
tamil makal kural