11 பெண்களுடன் திருமணம் அதிர வைத்த காதல் மன்னன்..!

.


இந்தியாவில் மருத்துவர், பொறியாளர் என பல பொய்களை கூறி 15 பெண்களை திருமணம் செய்த நபர் ஒருவழியாக காவல்துறையில் சிக்கியுள்ளார்.
பெங்களூரில் வசிக்கும் 35 வயதான மகேஷ் கேபி நாயக் என்ற நபர் கடந்த 2014ல் இருந்து 15க்கும் மேற்பட்ட பெண்களை சந்தித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தன்னை ஒரு பொறியாளர் என்றும் மருத்துவர் என்றும் திருமண பொறுத்த இணையதளங்களில் ஐடி உருவாக்கி வைத்து கொண்டு 15க்கும் மேற்பட்ட பெண்களை அந்த இணையதளம் வாயிலாகவே சந்தித்து திருமணம் செய்துள்ளார்.
மகேஷ் மருத்துவர் என்று அனைவரையும் நம்ப வைப்பதற்காக தும்கூர் பகுதியில் போலி கிளினிக் ஒன்றையும் கூட நடத்தி வந்துள்ளார்.
திருமணம் செய்து கொண்ட பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணம், நகைகளை எடுத்து கொண்டு தப்பியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட சில பெண்கள் கொடுத்த புகாரில் தற்போது பொலிஸில் சிக்கியுள்ளார் மகேஷ் கேபி நாயக்.
கைதான மகேசிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments