ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவாலும் மொட்டு அரசாங்கத்தாலும் கொண்டு வரப்பட்ட அஸ்வெசுமத்திட்டம் (ஆறுதல் திட்டம்) என்னும் நிவாரணத் திட்டத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.அதாவது அஸ்வெசுமத் கிட்டத்தின் கீழ் வறுமை நிலையிலுள்ள மக்கள் என்ற அடிப்படையில் சுமார் 12 இலட்சம் மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த அரசாங்கம் முடிவு செய்தது.ஆனால் இலங்கையில் வறுமையிலையில் 70 இலட்சம் வரை மக்கள் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். இதனை விடவும் அதிகமாக வறுமைப்பிடியில் இலங்கை மக்கள் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
உண்மையில், ராஜபக்சக்கள் மேற்கொண்ட பொருளாதாரக் குற்றமும் போர்க்குற்றமும் இணைந்து நாட்டில் அதிகமான மக்களை வறுமைக்குள் தள்ளியுள்ளது.போரினால் ஏற்பட்ட கடன் சுமை, பொருளாதாரக் குற்றங்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி என்பவற்றால் மிக அதிகமான மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோத்தாவின் வரிக் கொள்கை,விவசாயக் கொள்கை,இறக்குமதி மோசடிகள் என்பன பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அரசு இழக்கும் நிலையை ஏற்படுத்தியது.
கோத்தா,நண்பர்களின் ஆலோசனைக்கு இணங்க,வரிவழங்குனர் தொகையை 12 இலட்சத்தில் இருந்து 4 இலட்சம் ஆட்களாகக் குறைத்த போது நாட்டின் வரி வருமானம் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
விவசாயத்திற்கான இரசாயன உரத்தினை அதிரடியாக நிறுத்தியதால் 26 ஆயிரம் கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் சீனி இறக்குமதி வரிக் குறைப்பால் 1600 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. வெள்ளைப் பூடு, தேங்காய் எண்ணெய், கொரோனா தடுப்பூசி இறக்குமதிகளிலும் பல மோசடிகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இவ்வாறாக கோத்தாவின் அறிவீனமான செயற்பாடுகளால் பொருளாதாரக் குற்றம் ஏற்பட்டது.ஆளும் அரசியல்வாதிகள் பலர் ஊழல் மோசடிகள் கையூட்டுகளைக் கைவிடவில்லை என்ற கருத்தும் நிலவுகின்றது. இதனாலும் நாடு மோசமாகப் பாதிப்படைந்தது.இந்த நிலையில் பணவீக்கம் காரணமாக டொலரின் விலையும் ஏறியது. அதேவேளை, விலைவாசிகள் அதிகரிக்க,மக்கள் வருவாய் இழந்து நிற்கின்றனர்.இதனால் வறுமையாளர் தொகை அதிகரித்தது.இந்த நிலையில் நிவாரணத்திற்காக பல இலட்சக்கணக்கான மக்கள் வீதியில்இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
போர்க்குற்றம் பொருளாதாரக் குற்றங்களால் மக்களை ஏழைகளாக்கிய சிங்களத் தலைவர்கள் குறிப்பாக ராஜபக்சக்கள் அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலையில்,ரணிலிடம் ஜனாதிபதிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தப்பிப்ழைப்பு அரசியலைச் செய்து வருகின்றனர்.அடுத்த தடவை அதிகரத்தைக் கைப்பற்ற என்ன செய்யலாம் என்று மொட்டுக் கட்சியினர் தந்திரமான சூழ்ச்சியான வழிகள் பற்றி சிந்திக்காமல் இருக்க மாட்டார்கள். வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மொட்டுக்கட்சியை நம்ப மாட்டார்கள் என்றே தோன்றுகின்றது. பணத்தாலும், குடிபாணத்தாலும், சூழ்ச்சியாலும் ஆட்சியை எவ்வாறு கைப்பற்றலாம் என்பதே உருசி கண்ட பூனைகளின் அதிகாரப் பசியாகவுள்ளது.மொட்டுக்கட்சி அரசியல் வியூகத்தை வகுப்பதில் வல்லது என்று பசில் கூறியுள்ளார்.அந்த வகுத்தலில் எத்தனையோ தில்லுமுல்லுகள் மோசடிகளும் இருக்கலாம்.
0 Comments
tamil makal kural