விவசாய சேவை மத்திய நிலையங்களுக்கு போதியளவு யூரியா உரம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சனசமூக நிலையங்களுக்கு மேலதிகமாக 5,100 மெற்றிக் தொன் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,000 மெற்றிக் தொன் யூரியா இன்று (19) விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏதேனும் விவசாய சேவை நிலையத்தில் யூரியா உரம் கிடைக்காத பட்சத்தில், 077 551 0674 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் விற்பனை முகாமையாளரை தொடா்பு கொள்ள முடியும்,
0 Comments
tamil makal kural