வாழைச்சேனை பிரதேச நிருபர்
கொல்லப்பட்ட உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியோர் சிலர் அரச புலனாய்வாளர்களால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள மக்கள்!
மட்டக்களப்பு , வழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடியில் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களை நினைவு கூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வினை நேற்று மே–18, 2022 அன்று ஏற்பாடு செய்திருந்தார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் மூவரை விசாரணைக்காக அரச புலனாய்வாளர்களால் அழைத்துள்ளனர்.
கிண்ணையடிச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராமநாதன் நித்தியேஸ்வரன் மற்றும் அயல் கிராமத்தைச் சேர்ந்த இரு நபர்களும் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்தின்பல்வேறு இடங்களில் முள்ளி வாய்க்கால் படுகொலை தினம் தொடர்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இட்பெற்று வருகிறது.
அதனை நினைவு கூர்ந்து முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிண்ணையடியிலும் இடம்பெற்றது.
.இவ்வாறான நிலையில் பல்வேறு இடங்களில் அதனை தடுக்கும் நோக்கிலான நடவடிக்கைகளை அரச புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
tamil makal kural