மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட கல்வி அலகு மாணவர்களின் சித்திரக் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட கல்வி அலகு மாணவர்களின்  சித்திரக் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கீழ் இயங்கி வரும் விசேட கல்வி அலகில் கல்வி பயிலும் மாணவர்களின் சித்திரக் கண்காட்சி வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் உள்ள விசேட கல்வி பாடசாலையில் வெள்ளிக்கிழமை (02.10.2026 ) இடம் பெற்றது

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கல்விப்  பிரிவின் இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான ஏ. ஜெயகரனால் இந்த சித்திரம் வரையும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான தேவரஜனி உதயகரன், கரணியா சுபாகரன் போன்றோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கீழ் இயங்கி வரும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான இந்த விசேட கல்வி அலகின் மூலம் சுமார் 25 மாணவர்கள் கல்விச் செயற்பாடு மற்றும் உளவள அபிவிருத்தி, விளையாட்டுக்கள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்

இந் நிகழ்வின் போது இங்குள்ள மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது










Post a Comment

0 Comments