மட்டு. வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் தோணியில் மீன்பிடிக்கச் சென்ற நபர் இரண்டு தினங்களின் பின்னர் இன்று (10ம் திகதி) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈச்சந்தீவு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாந்தீவை அண்டிய (விமானப்படை தளம் அருகில்) வாவியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 Comments
tamil makal kural