யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, "தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு" கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நினைவு நிகழ்வில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹோன தெரிவித்துள்ளார்.

0 Comments
tamil makal kural