மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் ஆண் ஒருவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.5.2026) இடம்பெற்றுள்ளது.
கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வாவியில் சம்பவ தினமான இன்று காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து அதனை மீனவர் கரைக்கு இழுத்து வந்து பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.
குறித்த நபர் மது போதையில் வாவியில் நீராடிய நிலையில் நீரிழ் மூழ்கியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 Comments
tamil makal kural