மட்டக்களப்பு - ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையமொன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, ஆயிரத்திற்கு மேற்பட்ட போதை லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரசாத் லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விசேட தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments
tamil makal kural