மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விழிப்பூட்டல் பேரணி!
சர்வதேச புகைத்தல் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விழிப்பூட்டல் நிகழ்வு இன்று (13ம் திகதி) இடம் பெற்றது.
புகைத்தல் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் தாக்கம் பற்றிய விழிப்பூட்டல் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் பேரணியில் கலந்து கொண்டோர் ஏந்திச் சென்றனர்.
இந்நிகழ்வில் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் கி. டுலக்சினி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கி. ரமேஸ் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி நலன் விரும்பிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்
மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான, புகைத்தல் எதிர்ப்பு விழிப்பூட்டல் பேரணி மகிழடித்தீவு சந்தியூடாக கொக்கட்டிச்சோலை பிரதான விதியால், பட்டிப்பளை சந்தி வரை சென்று அங்கு புகைத்தல் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும் இடம் பெற்றது
0 Comments
tamil makal kural