RDPO மகளிர் கொத்தணிகள் ஒன்றிணைந்து நடாத்திய மகளிர் எழுச்சி நிகழ்வு

எஸ். சதீஸ்  - 

கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் கீழுள்ள மகளிர் கொத்தணிகளின் மகளிர் தின  நிகழ்வு

மண்முனை மேற்கு பிரதேசத்தில் இயங்கும் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் கீழுள்ள  மகளிர் கொத்தணிகள் ஒன்றிணைந்து  மகளிர் எழுச்சி நிகழ்வினை இன்று (25.3.2025) நடாத்தினர்.


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தாண்டியடியில் இந்நிகழ்வு நடை பெற்றது.


இதன் போது எட்டு மகளிர் கொத்தணிகள் தங்கள் கிராமப் பிரிவுகளில் இருந்து பேரணியாக தாண்டியடி சந்தியை வந்தடைந்து அங்கு நிகழ்வுகள் இடம் பெற்றது.


" எங்களால் முடியும் - சேர்ந்து பயணிப்போம் உரிமையை வென்றிடுவோம் " எனும் தொனிப்பொருளில் மகளிரின் நிகழ்வுகள் இடம் பெற்றது.


இதில் சுமார் எட்டு மகளிர் கொத்தணிகளிலிருந்து சுமார் 1200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் RDPO அமைப்பின் பணிப்பாளர் ரமேசானந்தம் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், சுகாதார அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.












Post a Comment

0 Comments