மட்டு. மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் RDPO அமைப்பும் நடாத்திய உற்பத்திப் பொருள் கண்காட்சியும் விற்பனையும் !
எஸ். சதீஸ்
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பும் இணைந்து நடாத்திய உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று வவுணதீவில் இடம் பெற்றது.
வவுணதீவு பொதுச் சந்தைக்கு அருகில் இடம் பெற்ற இந்நிகழ்வு மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
' நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்' எனும் தொனிப் பொருளுக்கு அமைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி அக்குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பினால் இந்த சுய தொழில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் திட்ட பிரதிநிதிகள், பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
tamil makal kural