தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்பு

.


வவுணதீவு, மண்டூர் மேலதிக நிருபர்கள்   - 

மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன்  உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை  பகுதியில் பிறந்து மூன்று (03) மாதமான குழந்தை ஞாயிற்றுக்கிழமை இரவ (09.03.2025 ) தாயாரிடம் பால் அருந்திவிட்டு குழந்தையும் தாயும் தமது வீட்டில்  உறக்கியுள்ளனர்.  மறுநாள் திங்கள் கிழமை (10) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.


வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரனைகளை மேற்கொண்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பணித்தார்.

இச்சம்பவம் தொடர்பக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments