மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் இன்று செவ்வாய்கிழமை (11) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவினை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதில் சுமார் 54 மாணவர்கள் கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது 38 மாணவர்களுக்கு நோய் நிலைமை பதிவான நிலையில், கரடியனாறு பிரதேச வைத்தியசாலை ஆரம்ப சிகிச்சையளிக்கப்பட்டதுடன் இதில் 26 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தினால் வைத்தியசாலை வளாகத்தில் பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் பிரவேசத்தினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிற்றுண்டிச்சாலை உணவு மாதிரிகள் மற்றும் பாடசாலை குடிநீர் மாதிரிகள் பெறப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பொது சுகாதார பரிசோதகர்ககளும் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments
tamil makal kural