(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் நலிவுற்றவர்களுக்குமான நிலைத்து நிற்கக் கூடிய வாழ்வாதார விவசாய செயல்திட்டங்களைத் துவங்கியுள்ளதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தெரிவித்தார்.
காலத்திற்கேற்ற திட்டமாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நலிவுற்ற மக்களை மீட்டெடுக்க அதிலும் குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட மக்களை மீண்டெடுக்க வேண்டியயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஒத்துழைப்புடன் டயகோனியா சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இந்தத் திட்டம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் அமுலாக்கம் செய்யப்படுகின்றது.
இதன் திட்ட அமுலாக்கல் துவக்க நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஞாயிறன்று 20.10.2024 இடம்பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், வாகரை வலய உதவிப் பணிப்பாளர் ஐ.எல். பௌசுல் அமீன், சத்துருக்கொண்டான் விசாயப் பண்ணை முகாமையாளர் மதுமிதா டினேஸ், விழுது நிறுவனத்தின் மேற்பாதர்டவை மற்றும் கண்காணிப்பு நிபுணர் ஜனனி நிறோஜன் உட்பட விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் நிருவாக அலுவலர் கந்தன் நிர்மலா, சமூக ஒருங்கிணைப்பாளர்களான பி. முரளீதரன், குணராஜ் சிந்துஜா ஆகியோரும் பயனாளிளும் கலந்து கொண்டனர்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லரிப்பு, தட்டுமுனை, குஞ்சன்குளம் ஆகிய கிராமங்களிலுள்ள நலிவுற்ற மக்களுக்கும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்குமாக “சமூக முயற்சிகள் மூலம் நீடித்து நிலைக்கக் கூடிய வாழ்வாதார மேம்பாட்டிற்கான மற்றும் புதுமையான கிராமப்புற தொழில் முயற்சிகள்” எனும் இந்த செயல் திட்டம் சமூகப் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது.
இத்திட்டம் கிழக்குப் பல்கலைக்கழக துறைசார் நிபுணர் குழுவினால் முன்னராகவே ஆய்வு செய்யப்பட்டதாகும். அதனடிப்படையில் மூன்று கிராமங்களிலிருந்தும் ஆர்வக் குழுக்களான விவசாயக் குடும்பங்கள் உற்பத்திப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தப் பயனாளிகளுக்கு சுமார் இருபது இலட்சம் ரூபாய் பெறுமமதியான விவசாய உபகரணங்களும் உள்ளீடுகளும் வழங்கப்படு;கின்றன.
ஏற்கெனவே, இந்தப் பயனாளிகளுக்;கு இயற்கைச் சேதன வீட்டுத் தோட்ட விவசாயம், மண்புழு பசளை உற்பத்தி, வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையில் பால்நிலை சார் கண்ணோட்ட முறைமைகள், சந்தைப்படுத்தல், பெறுமதி சேர் உற்பத்தி, சேதமற்ற அறுவடை, சேதமற்ற களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் விவசாயத் திணைக்களத்தின் பங்கேற்புடன் வழங்கப்பட்டுள்ளன.
0 Comments
tamil makal kural