மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இரு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்படைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
குறித்த கைது நடவடிக்கை நேற்று (20.05.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் வளர்த்து வரும் இரு மாடுகளை திருடிய சம்பவத்தில் தலைமறைவாகிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 11ஆம் திகதி வீட்டை உடைத்து அங்கிருந்த வெளிநாட்டு பணமான 7,500 ரியால், கையடக்க தொலைபேசி மற்றும் இலங்கை பணம் உட்பட 8 இலட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
.
0 Comments
tamil makal kural