மின்சாரம் தாக்கி 3 வயது சிறுமி பலி !

 


களுத்துறை மாவட்டத்தில் பயாகல, மக்கொன பகுதியில் மின்சாரம் தாக்கி 03 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மக்கொன, முங்ஹேன பகுதியைச் சேர்ந்த 3 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுமி வீட்டில் பாதுகாப்பற்ற மின்சார பிளக்கை தொட்டபோது மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிகிச்சைக்காக பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments