வவுனியாவில் இன்று (08) காலை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம், அவர்கள் பொலிஸார் என்று அடையாளம் காணாமல் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவரை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
34 வயதுடைய மதவாச்சியை சேர்ந்த வைத்தியர், 38 வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர், 31 வயதுடைய வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
tamil makal kural