(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பில் முதன் முறையாக றோட்டரக்ற் கழகம், இளம் டென்னிஸ் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மட்டக்களப்பு டென்னிஸ் பயிற்சி கழகத்துடன் இணைந்து, திறமை, போட்டி, விளையாட்டு மனப்பான்மை மற்றும் “நீடித்த தாக்கத்தை உருவாக்கு” என்ற உணர்வைக் கொண்டாடும் உங்களுக்கான மேடை ஐந்து நாள், பல பிரிவு டென்னிஸ் போட்டியை நடத்துகிறது.
26ஆம் திகதி புதனன்று தொடக்கம் 30ஆம் திகதி ஞாயிறு வரை மட்டக்களப்பு லேக் வியூ அரங்கில் சிவப்புப் பந்து, பச்சைப் பந்து, ஓரேஞ் பந்து, பொதுப் பந்து என இந்த டென்னிஸ் போட்டிகள் ஐந்து பிரிவுகளாக இடம்பெறுகின்றன.
8 வயதிலிருந்து வயது வந்தோர் வரை இப்போட்டிகளில் பங்குபற்றி தங்களது திறமைகளை வெளிக்காட்ட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையர் இரட்டையர் ஆட்டங்களாகவும் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன.
இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வுகளும் 30ஆம் திகதி மேற்படி அரங்கிலேயே இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 Comments
tamil makal kural