மட்டக்களப்பில் சமையற் கலைப் பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
பெண்களின் குடும்ப வருமானத்தை உயர்த்தி சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடன் மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து பங்குபற்றிய 24 பேருக்கு நான்கு மாதங்கள் கொண்ட பயிற்சி நெறி வழங்கப்பட்டிருந்தது.
பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களால் தயாரிக்கப்பட்ட கேக், சுவிட்ஸ் உள்ளிட்ட உணவு வகைகளும் இதன்போது கட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அம்மன் மகளிர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில், சுவிஸ் நாட்டிலுள்ள பொன்டானா பவுண்டேசன் நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் இப்பயிற்சிநெறி நடைபெற்றது
அம்மன் மகளிர் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வேலாயுதம் வாமதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், வளவாளர் திவாகரன், எஸ்.ரி.ஏ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், இனைப்பாளர் ஜினதாஸ ரஞ்ஜித்குமார், மற்றும் வவாளர்கள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
தற்காலத்தில் தொழில் கல்வி என்பது மிக அவசியமானது இது போன்ற தொரு தொழில் பயிற்சியினை இந்த அம்மன் மகளிர் நிறுவனத்தினர் மேற் கொண்டு வருகின்றனர் என்பது பற்றி இங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் கருத்து தெரிவித்தார்






0 Comments
tamil makal kural