முப்பெரும் விழாவில் “அறுவடை” சிறப்பு நினைவு மலரும் “உயர்வு” அரையாண்டு சஞ்சிகையும் வெளியீடு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் 3ஏ சன சமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முப்பெரும் விழா நிகழ்வில் நேற்றைய விதைகள் இன்றைய அறுவடை சிறப்பு நினைவு மலரும், பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்;கிய “உயர்வு” அரையாண்டு சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தின் தலைவரும் மாவட்டச் செயலக தலைமையகப் புள்ளி விவரவியல் உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம். றூமி தலைமையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை கேட்போர் கூட அரங்கில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அங்கு கூடவே, சனசமூக நிலையத்திற்கான இணையத்தளம், கொடி, கீதம் அறிமுகம், சமூகப் பணியாற்றியோருக்கான கௌரவிப்பு, சனசமூக வாசிப்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு, சனசமூக நிலையத்துடன் இணைந்து பல்வேறு வகையான சமூகப் பணியாற்றிய உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளும் விமர்சையாக இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி பதில் ஆணையாளருமான ஏ. எல். எம். அஸ்மி, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.எப். றிப்கா, மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம்.ஐ. முஹம்மத் ஆஸாத், ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நழீம் உள்ளிட்ட இன்னும் அனேக அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.





0 Comments
tamil makal kural