மட்டக்களப்பில் சத்திய சாயி பாபாவின் 100வது ஜனன தினத்தை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!
சத்திய சாயி பாபாவின் 100வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு விமான நிலைய வீதியில் அமைந்துள்ள சத்திய சாயி அனுக்ரஹ நிலையத்தில் 100 குடும்பங்களுக்கு இன்று அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை சத்திய சாயி அனுக்ரஹ நிலையத்தின் தலைவர் எஸ்.சுந்தரராஜன் இன்றைய நிகழ்வுகள் இடம் பெற்றது.
இங்கு சாயி சகோதர சகோதரிகளால் பஜனை இசைக்கப்பட்டதுடன் ஓய்வு பெற்ற முன்னாள் வலய கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி அவர்களால் இன, மத மொழிகளை கடந்த வழிபாடு சாயி வழிபாடு பற்றிய இறை சிந்தனையை ஏற்படுத்தும் கருத்துரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து தீபாராதனை , மங்கள ஆராத்தி வழிபாடு இடம் பெற்றது.
அதனையடுத்து மட்டக்களப்பு பகுதியில் உள்ள பல கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விஷேட தேவையுடைய மற்றும் குடும்ப பொருளாதாரத்தில் கஸ்டமான நிலையில் உள்ள 100 குடும்பங்களுக்கு லண்டனில் சரண்யன் அறக்கட்டளை ( Saranyan Foundation) அமைப்பினால் அரிசி, சீனி, கோதுமை மாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
இதேவேளை இங்கு வருகை தந்த அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.






0 Comments
tamil makal kural