ருத்திரன்
உள்ளுராட்சி வார நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இலக்கியம் கல்வி,மற்றும் நூலகம் மேம்பாட்டு தினம் என்ற தலைப்பில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.வாகரை பிரதேச மாணவர்களுக்கான உள்ளுராட்சி வாரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.இதி; பொதுமக்கள் எவ்வாறு உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது அதன் பயன்கள் என உள்ளுராட்சி திணைக்களங்களின் மக்கள் சேவை தொடர்பாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் உள்ளுராட்சி தொடர்பான வினாக்கள் அடங்கிய பொது அறிவு வினா விடை பரீட்சை நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் இலக்கியம் கல்வி மேம்பாடு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் பிரதம அதிதிகளாக உள்ளுராட்சி உதவி அணையாளர் ந.ஜங்கரன்,உதவிக் கல்விப் பணிப்பாளர் ம.வி;;;ஜி மற்றும் சபை செயலாளர் தொ.செ.பி.குயின்ரஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்ரம்பர் 15-21 ஆம் திகதி வரை 'வளமான நாடும் அழகான வாழ்க்கையும்' எனும் எண்ணக் கருவில் மறுமலர்ச்சி நகரம் எனும் தொணிப் பொருளில் உள்ளுராட்சி வாரம் தொடர்பான நிகழ்வுகள் நாடு பூராகவும் உள்ளுராட்சி மன்றங்களில் இடம்பெற்று வருகிறது
கருப் பொருள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் 2025.09.15 ஆம் திகதி -21 ஆம் திகதி வரை வரை நடைபெற்றுவருகின்றது.இறுதி நிகழ்வானது 'மறுமலர்ச்சி நகரம் ' என்ற தொணிப் பொருளில் பரிசளிப்பு நிகழ்வு வாகரை கராச்சார மண்டபத்தில் நடைபெறவள்ளது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க.அமலினி மற்றும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளல் திருமதி எம்.ஆர்.எவ்.றிப்கா ஷபீன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.




0 Comments
tamil makal kural