தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் மூன்று மாவட்டங்களுக்குமான உப நிர்வாகங்கள் தெரிவு
எஸ். சதீஸ் -
கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை (08.08.2925ம் திகதி) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது
ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எ. பிரியகாந்தன் தலைமையில் இப்பொதுக் கூட்டம் ஆரம்பமானது.
இதன் போது செலலவறிக்கை, கடந்த கால செயற்பாட்டு அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் ஆசிரியர் நலன் சார்ந்த விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தி உறுப்பினர்கள் இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி மூன்று மாவட்டங்களுக்குமான உப நிர்வாகமும் இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.
செயற்பாட்டு அறிக்கையினை செயலாளர் எம். மகேந்திரராஜாவும் செலவு அறிக்கையினை வ. சுப்பிரமணியமும் இக் கூட்டத்தில் வழங்கினர்.




0 Comments
tamil makal kural