மண்முனை மேற்கு கிரிக்கட் சம்மேளனம் நடாத்தும் மண்முனை மேற்கு பிரிமியர் லீக் போட்டி ஆரம்பம் : 10 அணிகள் பங்கேற்பு !
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு கிரிக்கட் சம்மேளனம் நடாத்திய மண்முனை மேற்கு பிரிமியர் லீக் போட்டி இன்று கரவெட்டி ஆதவன் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் எம்.சுதாராஜ் தலைமையில் இப்போட்டி நிகழ்வுகள் ஆரம்பமானது.
பிரதேசத்திலுள்ள பத்து (10) அணிகள் பங்கு பற்றும் இவ் மென்பந்து பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகி இறுதிப் போட்டி எதிர்வரும் 30ம் திகதி கன்னங்குடா மைதானத்தில் நிறைவு பெறவுள்ளது.
இப்போட்டிகள் இவ்வாரம் கரவெட்டியிலும் தொடர்ந்து,
நாவற்காடு, தரிப்புல் தோட்டம், கன்னங்குடா போன்ற இடங்களில் தொடர்ந்து வரும் சனி ஞாயிறு தினங்களில் இடம் பெற்று எதிர்வரும் 30ம் திகதி இறுதிப் போட்டியில் இடம்பெறும்.
இப்போட்டியில் சம்பியனாக வெற்றி பெறும் அணிக்கு ரூபா ஒரு இலட்சம் பணப் பரிசும், அடுத்து வரும் இடங்களைப் பெறும் சில அணிகளுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
மண்முனை மேற்கு கிரிக்கட் சம்மேளனம் நடாத்தினால் மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கு செய்த இப் பிரிமியர் லீக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் வவுணதீவு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் போட்டிக்கான அனுசரணையாளர்கள், விளையாட்டு அணிகளின் தலைவர்கள் . என பலர் கலந்து கொண்டனர்.
-- எஸ்- சதீஸ்
0 Comments
tamil makal kural