வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு தேசிய விருது..

ருத்திரன் -

தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முதலிடம் பெற்றமைக்காக 
விருதினைப் பெற்றுள்ளது.


சுகவனிதையர் சிகிச்சை சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் தேசிய  ரீதியில் உள்ள  அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மத்தியில்  அதி உயர் தரக்கணிப்பின் மூலம் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய பிரிவுகளில்  மிகச் சிறப்பான  
சேவையினை வழங்கியமைக்காக  வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தேசிய ரீதியில்
முதலிடம் பெற்றமைக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments