நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

 நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.




Post a Comment

0 Comments