சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஸ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (IMF வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), ஹுய் மியாவ் (சிரேஸ்ட நிதித்துறை நிபுணர்), ஹோடா செலிம் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), டிமிட்ரி ரோஸ்கோவ் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), சந்தேஸ் தூங்கானா (பொருளாதார நிபுணர்), மற்றும் மனவே அபேயவிக்ரம (உள்ளூர் பொருளாதார நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments
tamil makal kural