பிரிட்டனின் கொரோனா வெக்சின் டாஸ்க் போர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் என்பவர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகில் அடுத்து ஏற்படும் பாதிப்பால் 5 கோடி பேர்வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர் எனவும் அதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் தொற்றானது அதைவிட மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புதிய நோய் தொற்று கொரோனாவை விட ஏழு மடங்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் இந்த பெருந்தொற்று ஏற்கனவே நமக்கு மத்தியில் இருக்கும் வைரசில் இருந்து தோன்ற வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் வைரஸ் உருமாறக் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments
tamil makal kural