எஸ்.சதீஸ் -
ஐரோப்பிய ஒன்றியம் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 16 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்குமான
அணிக்கு 11 பேர் கொண்ட காற்பந்தாட்டப் போட்டி நேற்று பிற்பகல் ஸ் ரீட் சைல்ட் (Street Child) அமைப்பின் ஏற்பாட்டில் முனைக்காடு இராமகிருஸ்ணா மைதானத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், வலயக்கல்விப் பணிப்பாளர் ஜெயச்சந்திரன், ஸ்றீட் சைல்ட் அமைப்பின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் ஏ. கஜேந்திரன், பிரதிக்கல்வி ப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மற்றும் உதவி கல்விப்பணிப்பாளர்கள் ஸ்றீட் சைல்ட் (Street Child) அமைப்பின் பிரதிநிதிகள், கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வலயத்திலிருந்து 6 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஸ்றீட் சைல்ட் அமை ப்பினரால்
ஆறு மாதகாலப்பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான இறுதிப் போட்டி நடை பெற்றது.
ஆண்களுக்கான இவ் இறுதிப் போட்டியில் நாவற்காடு நாமகள் வித்தியாலயமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயமும் மோதிக் கொண்டதில் இரு அணிகளும் எந்த கோள்களும் போடாத நிலையில் தண்ட உதை மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயமும் வெற்றி பெற்றது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில்
அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தை எதிர்த்து ஆடிய பன்சேனை பாரிவித்தியாலயம் 3.0 என்ற அடிப்படையில் அடிப்படையில்
கோல்களை போட்டு வெற்றி பெற்றது.
1ம், 2ம், 3ம் நிலைகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments
tamil makal kural