பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கான இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துப் பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்தார்.
இதன்படி, குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
tamil makal kural