நடைபெற்று முடிந்த (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவியை பாராட்டும் நிகழ்வு இன்று(08.09.2025) நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவியான பிறைசூடி அபிரிஜா - வெளியாகிய
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடம் பெற்ற சாதனை படைத்துள்ளார்.
மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவட்டவான், செறுவாமுனை கிராமத்தில் வசிக்கும் அபிவிருத்தி உத்தியோகர்தரான
பிறைசூடி கிரிஜா ஆகியோரின் புதல்வியாவார்.
இப்பாடசாலையில் ஏழு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
பாடசாலை அதிபர் சிவாஜினி ஜெயராஜ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு, சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



0 Comments
tamil makal kural