சுரவணையடியூற்று திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நாகமணி நாராயணபிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் மறுநாள் உறவினர் ஒருவர் குறித்த வீதியூடாக தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் போது குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்ததுடன், மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments
tamil makal kural