மட்டு. போதனா வைத்தியசாலையின் புதிய நிர்வாக அபிவிருத்தி குழு தெரிவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய நிர்வாகக் குழு நேற்றய தினம் (30) ஏகமனதாக தெரிவு 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு கூட்டமானது இன்றையதினம் மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கூட்டமானது  இன்றையதினம் வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் ஒன்று கூடியதுடன்  புதிய நிர்வாகக்குழுவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் முன்மொழிவிற்கமைவாக  உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் ஜீவரெட்ணம் கெனடி அவர்கள் நிர்வாகக்குழு

 தலைவராகவும்,  சண்முகலிங்கம் சுரேஷ்குமார் அவர்கள் இணைச்செயலாளராகவும் , தம்பிராஜா ஈஸ்வரராஜா அவர்கள் பொருளாளராகவும்  , கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அவர்களின்  முன்மொழிவிற்கமைவாக  உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இளையதம்பி வரதராஜன் அவர்கள் நிர்வாகக்குழு உப தலைவராகவும் ஏகமனதாக  தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். மேற்படி நிர்வாகக்குழுவானது 3 வருடங்கள் பதவியில் இருந்து வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பிலும், வளர்ச்சி தொடர்பிலும் பங்காற்றுவதுடன் வைத்தியசாலையின் அபிவிருத்தியினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வர். இதன்போது வைத்தியர்கள், துறைசார் அதிகாரிகள், உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.




'

Post a Comment

0 Comments