தங்களை நிரந்தரமாக்க கோரி டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டம்


ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தரமாக்க கோரி டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (11) காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.


சுமார் 07 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் கடமை புரிவதாகவும் தங்களுக்கு நிரந்தரமான நியமனத்தை வழங்குமாறு கோரி இப் போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.

இதன்போது செங்கலடி, வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி உள்ளிட்ட பல பிரிவுகளில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 07 வருடங்களாக டெங்கு தடுப்பு உதவியாளர்களாக கடமையாற்றும் எங்களை அரசினால் நிரந்தரமாக நியமிக்க முடியாமல் இருக்கிறது. எங்களுக்கு நிரந்தர நியமனம் சுகாதார அமைச்சின் சுகாதார திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும். எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்







Post a Comment

0 Comments