கொலன்னாவ – கொத்தடுவ வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 41வயதான ஒருவர் காயமடைந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்த இனந்தெரியாத இருவர் இரவு 8.40 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் மற்றும் குற்றத்திற்கான காரணங்கள் எவையும் இதுவரை கண்டறியப்படவில்லை

0 Comments
tamil makal kural