மண்முனை மேற்கில் காஞ்சிரங்குடா, பன்சேனை பிரிவின் சமுர்த்தி சமுதாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்திய மகளிர் தின நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பன்சேனை, காஞ்சிரங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஒன்றிணைந்து மகளிர் தின நிகழ்வு சனிக்கிழமை 21.03.2026 ம்திகதி நடாத்தப்பட்டது.
சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் வைரமுத்து லோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை.பாடசாலை அதிபர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், பிரிவின் வெளிக்கள உத்தியோகத்தர்கள், வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் உள்ளிட்ட பலர் அதிகாகளாக கலந்து சிறப்பித்தனர்.
.
பெண்கள் கெளரவிப்பு, உதைபந்தாட்ட போட்டிகள் மற்றும் மகளிர் தின சேமிப்பு நிகழ்வு, மகளிருக்கான சமுர்த்தி வங்கி கணக்கு திறத்தல் போன்ற பல நிகழ்வுகள் நடை பெற்றது.
இங்கு நடை பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் பன்சேனை பாரி வித்தியாலய மகளிர் அணியின் A மற்றும் B அணிகள் மோதிக் கொண்டன.
இதில் 2. 0 என்ற கோள் அடிப்படையில் A அணி 1ம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கங்களும் வெற்றிக் கிண்ணமும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கிராமங்களில் சிறந்த தொழில் முயற்சியாளர் தேசிய அணிக்கு தெரிவான விளையாட்டு வீராங்கனைகள், சாதனைப் பெண்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.











0 Comments
tamil makal kural